Wednesday, September 26, 2007

364. பிரமிக்க வைத்த உலகக்கோப்பை வெற்றி

இந்திய-பாக் அணிகளுக்கு இடையே நேற்று நடந்த T-20 இறுதிச்சுற்று போட்டி, அபாரமான, பல திடுக் தருணங்கள் நிறைந்த, பலமில்லா இதயங்கள் கொண்டவர்களுக்கு ஒவ்வாத ஒன்று என்று மட்டும் நிச்சயமாகக் கூற முடியும் :)

டாஸில் வென்ற தோனி எப்போதும் போல் பேட் செய்ய முடிவு செய்தார். முதலில் பேட் செய்து 3 (இங்கிலாந்து, தெ.ஆ, ஆஸ்திரேலியா எதிராக) மகத்தான வெற்றிகளுக்கு தலைமை தாங்கிய மாவீரரின் முடிவை குறை சொல்ல நான் யார்? தோனி தனது திட்டம் 175-180 ரன்களை இலக்காக நிர்ணயிப்பது என்று கூறியிருந்தார்.

பாகிஸ்தான் (உமர் குல், தன்வீர், ஆசிப்) சிறப்பாக பந்து வீசினர். இந்திய பேட்டிங் சோபிக்கவில்லை. யுவராஜும், தோனியும் அதிக ரன்கள் எடுக்காவிட்டாலும், கௌதம் கம்பீர் மிகவும் பொறுப்புடன், அதே நேரத்தில் பிரமாதமான ஆட்டம் ஆடி 75 ரன்கள் (54 பந்துகள்) எடுத்தார். கம்பீர் எடுத்தது, இந்தியா எடுத்த மொத்த (157) ரன்களில், கிட்டத்தட்ட பாதி! இன்னிங்க்ஸின் இறுதியில் ரோஹித் எடுத்த 30 ரன்கள் (16 பந்துகள்) குறிப்பிடப்பட வேண்டியவை. ஆடுகளத்தில் பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக எதுவும் இல்லாததால், நாம் ஒரு 20 ரன்கள் குறைவாக எடுத்து விட்டதாகத் தான் எனக்குத் தோன்றியது.

இம்ரான் நசீரும், ஹ·பீஸ¤ம் களமிரங்கினர். RP சிங்கின் முதல் ஒவரில் (வெளி செல்லும் பந்தைத் தொட்டு!) உத்தப்பாவிற்கு கேட்ச் கொடுத்து, ஹ·பீஸ் OUT! அடுத்த ஸ்ரீசாந்த் ஓவரில், எதிர்பார்த்தது போலவை, இம்ரான் வெறியாட்டம் ஆடியதில் 21 ரன்கள்! ஆனாலும் RPS நிதானம் இழக்காமல், மூன்றாவது ஓவரில் (இந்த முறை உள்ளே வந்த பந்து வாயிலாக!), அக்மலை Clean bowled செய்ததில் ஸ்கோர் 26-2. தனது முதல் ஓவரில் 21 ரன்கள் தந்த ஸ்ரீசாந்த், அடுத்து ஒரு maiden ஓவர் வீசியது மிக்க பாராட்டுக்குரியது.

ஆட்டத்தின் முக்கியமான turning point என்று நான் நினைக்கும் விஷயம் 6வது ஓவரில் நிகழ்ந்தது. அது உத்தப்பா செய்த (நசீர் 14 பந்துகளில் 33 ரன்கள் எடுத்து ஆட்டம் நம்மிடமிருந்து கை நழுவிக் கொண்டிருந்த கட்டத்தில்) அற்புதமான (direct hit) ரன் அவுட்! அடுத்த 4 ஓவர்களில் பாகிஸ்தான் 17 ரன்கள் மட்டுமே எடுத்து, யூனுஸ் கானையும் இழந்ததில், நம் அணியினருக்கு நம்பிக்கை அதிகமாகி, பாகிஸ்தானுக்கு பிரஷர்!

இந்த கட்டத்தில், பதானும், ஜோகிந்தரும் திறமையாக பந்து வீசிக் கொண்டிருந்தனர். அடுத்த முக்கிய நிகழ்வுகள் பதானின் (12வது) ஓவரில் வீழ்ந்த 2 விக்கெட்டுகள்! தேவையான ரன் ரேட் கூடிக் கொண்டே (அப்போது 9.11) போவதைக் கண்டு, கேப்டன் ஷோயப் மாலிக் அடிக்கப் போய், ரோஹித்துக்கு சுலபமான கேட்ச் வழங்கி OUT ! 'அவசர அடி' (ஷாஹித்) அ·ப்ரிடி, தான் எதிர்நோக்கிய முதல் பந்தை mid-off திசையில் தூக்கி அடித்தார். அதிக உயரம் சென்ற பந்தை, அருமையாக ஜட்ஜ் செய்து, ஸ்ரீசாந்த் பிடித்தது ஒரு சூப்பர் கேட்ச்! இந்த கட்டத்தில், ஸ்கோர் 78/6, தேவையான ரன்ரேட் 10.00 (8 ஓவர்கள் பாக்கி). Definitely, India was in the Driver seat :)

அடுத்த 3.5 ஓவர்களில், மிஸ்பாவும், அரா·பட்டும் ஜோடி சேர்ந்து 26 ரன்கள் சேர்த்தனர். பதானின் கடைசி ஓவரில் (ஆட்டத்தின் 16வது ஓவரில்) அரா·பட் clean bowled. இர்·பான் பதான் பந்து வீச்சு 4-0-16-3

3 விக்கெட்டுகள் மட்டுமே கைவசம் இருந்த நிலையில், பாகிஸ்தானிய வெற்றிக்கு 4 ஓவர்களில் 54 ரன்கள் தேவை (பிரதி ஓவர் 13.5 ரன்கள்). இந்த நிலையில், இந்தியா சுலபமாக வென்றிருக்க வேண்டும்! ஆனால், ஹர்பஜன் வீசிய மிக மிக மோசமான 17வது ஓவரால் தான், ஆட்டம் பாகிஸ்தான் பக்கம் திரும்பியது!

அது ஒரு விசேஷமான ஓவர், அரை ஓவர் maiden, மீதி அரை ஓவரில் மிஸ்பா 3 ஸிக்ஸர்கள் அடித்தார்! மிஸ்பா பிரமாதமாக ஆடினார் என்று கூறுவதை விட, அனுபவமிக்க ஹர்பஜன் பிரஷரில் மோசமாக பந்து வீசினார் என்றே கூறுவேன்! இப்போது 3 ஓவர்களில் 35 ரன்கள் என்ற நிலைமை. எனக்கோ சரியான கடுப்பு, டென்ஷன் :-(

அடுத்து, ஸ்ரீசாந்த் தன் பங்குக்கு, 18வது ஓவரில் 15 ரன்கள் தாரை வார்த்தார். Bat-ஐக் கூட சரியாகப் பிடிக்கத் தெரியாத தன்வீர், 2 ஸிக்ஸர்கள் அடித்தது, பெரிய கொடுமை! Cricket is a great leveller! ஆனால், அந்த ஓவரின் கடைசிப் பந்தில், ஸ்ரீசாந்த் தன்வீரை clean bowled செய்து, மீண்டும் என் நம்பிக்கையைத் துளிர்க்க வைத்தார்!

2 ஓவர்கள் - பாக் வெற்றிக்கு 20 ரன்கள்! போட்டியின் 19வது ஓவரை வீசிய RP சிங், அது தான் அவர் வாழ்க்கையில் வீசும் கடைசி ஓவர் என்று எண்ணச் செய்யும் அளவுக்கு, டென்ஷன் ஆகாமல், மிகத் திறமையாக, வைராக்கியத்துடன் பந்து வீசினார். இவ்விளைஞர் வெகு தூரம் செல்வார் என்பது என் நம்பிக்கை.

ஓவரின் முதல் 4 பந்துகளில் 3 ரன்கள் மட்டுமே தந்து, ஐந்தாவதில் உமர் குல்லின் ஸ்டம்பை முறித்தார்! பாக் 141-9, இந்தியாவுக்கும், உலகக் கோப்பை வெற்றிக்கும் இடையே இருந்தது ஒரு பாகிஸ்தானிய விக்கெட் மட்டுமே!!! துரதிருஷ்டவசமாக ஓவரின் கடைசிப் பந்தில், edge வாயிலாக, ஆசிப்புக்கு பவுண்டரி கிட்டியதில், இறுதி ஓவரில் பாகிஸ்தானிய வெற்றி இலக்கு 13 ரன்கள்!

ஹர்பஜனா, ஜோகீந்தரா என்று யோசித்த தோனி, கடைசி ஓவரை வீச ஜோகீந்தரை அழைத்தார். அன்று ஞாலம் அளந்த பிரானையும், துங்கக் கரிமுகத்துத் தூமணியையும் நான் தியானிக்கத் தொடங்கினேன்! என்னளவில் உடலசைவு எதுவும் இல்லாமல் பார்த்துக் கொண்டேன் (கிரிக்கெட் செண்டிமெண்ட் பா:))

மிஸ்பா தயார்! ஜோகீந்தரின் முதல் பந்து ஒரு பெரிய wide - 12 ரன்கள் தேவை - அடுத்த பந்தில் ரன் இல்லை - அடுத்த பந்து மிஸ்பா அடித்த அடியில் ஸிக்ஸருக்குப் பறந்தது! இப்போது 4 பந்துகளில் 6 ரன்கள் தேவை!

கிட்டத்தட்ட 25 வருடங்களுக்கு முன் நடந்த ஷார்ஜா ஆட்டமும், மியதாத் சேத்தன் சர்மாவை அடித்த கடைசிப் பந்து ஸிக்ஸரும் என் ஞாபகத்தில் நிழலாடின! ஜோகீந்தர் சற்று ஆசுவாசப்படுத்திக் கொண்டு, மூன்றாவது பந்தை ஒரு slow Fulltoss-ஆக வீசினார். அதை மிஸ்பா fine leg தலை மேல் தூக்கி அடிக்கு விதத்தில் ஆட முயற்சித்த ஷாட் சற்றே, "மிஸ், பா" ஆகி பந்து மட்டையில் சரியாகப் படாமல், உயரே பறந்தது!

ஸ்டேடியத்தின் இரைச்சலையும், சூழலின் அழுத்தத்தையும் மீறி, வரலாற்று சிறப்பு மிக்க அந்த காட்சை ஸ்ரீசாந்த் பிடித்தே விட்டார் :) T20 உலகக் கோப்பையை இளைய பாரத அணி வென்றே விட்டது!!! 24 ஆண்டுகளுக்குப் பின் மற்றொரு உலகக் கோப்பை!

சமீபத்தில் நடைபெற்ற (ஒரு நாள்) உலகக் கோப்பை போட்டிகளில், முதல் சுற்றிலேயே நாம் வெளியேறிய அவமானம் இந்த அற்புதமான வெற்றியால் துடைக்கப்பட்டு விட்டது! அது போலவே, மியதாத் அடித்த கடைசிப் பந்து ஸிக்ஸர் என்ற துர்சொப்பனம் இனிமேல் என்னைத் துரத்தாது :)

"நீவிர் இன்னுமோர் நூற்றாண்டு இரும்" என்ற வைணவப் பாரம்பரிய வாழ்த்துக்களை, உலகக் கோப்பையை வென்ற இளைய பாரதத்தினருக்குத் தெரிவித்துக் கொள்கிறேன் :)

சக் தியா இந்தியா !!!!!!!!!

என்றென்றும் அன்புடன்
பாலா

*** 364 ***

6 மறுமொழிகள்:

enRenRum-anbudan.BALA said...

Test !

said...

மேட்ச் முடிஞ்சு 48 மணிநேரம் ஆகப் போகுது...பலரும் அன்றே, அப்போதே பதிவு போட்டு, விமர்சிச்சு எல்லாம் ஆச்சே?....இப்போ இப்படி ஒரு பதிவு தேவையா?

அருண்மொழி said...

அமெரிக்கர்கள் பாணியில் ஒர் அலசல். அவர்கள் எப்பொழுதும் எதிர் ஆட்டக்காரர் நன்றாக ஆடினார் என்று ஒப்புக்கொள்ள மாட்டார்கள்.

//இம்ரான் வெறியாட்டம்// - அப்படி என்றால் யுவராஜ் 6 ஸிக்ஸர் அடித்தது காட்டாட்டமா?

//மிஸ்பா பிரமாதமாக ஆடினார் என்று கூறுவதை விட, அனுபவமிக்க ஹர்பஜன் பிரஷரில் மோசமாக பந்து வீசினார்//

எந்த பகுதியில் அடித்தால் ஸிக்ஸரை சுலபமாக எட்டலாம் என்று கணித்து அடித்திருக்கிறார்.

It is just a game. Give them the credit they deserve.

அருண்மொழி said...

At the end of the day - the real winner is cricket. Both the teams played well and provided an entertaining final

RK said...

"துரதிருஷ்டவசமாக ஓவரின் கடைசிப் பந்தில், edge வாயிலாக, ஆசிப்புக்கு பவுண்டரி கிட்டியதில், இறுதி ஓவரில் பாகிஸ்தானிய வெற்றி இலக்கு 13 ரன்கள்!"

என்னை பொறுத்தவரை இந்த ஷாட்தான் ஆட்டத்தின் திருப்புமுனை..ஆசிப் இந்த நான்கு ரன்களை அடித்த பிறகுதான், தோனி தேர்ட் மேன்ல் ஸ்ரீசாந்த்தை நிறுத்தினார்.இல்லையெனில் மிஸ்பா அடித்த ஷாட் பவுண்டரிக்கு சென்றிருக்கும்

enRenRum-anbudan.BALA said...

Arunmozhi, rk,
வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.

நன்றி நண்பரே !

வருகை தந்தமைக்கு நன்றி! உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்!
Related Posts with Thumbnails